இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்படுபவர்கள் யார்?


இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்படுபவர்கள் யார்?


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் சிலர் மாத்திரமே எடுத்து கொள்ளபடுவார்கள் என்று பரிசுத்தவேதாகமம் தெளிவாக சொல்லுகிறது. இந்த எடுத்து கொள்ளபடும் சிலர் யார்? இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை வேதத்திலிருந்து தெளிவாக ஆராய்வோமாக.

கர்த்தராகிய இயேசு தம்முடைய மணவாட்டி சபைக்காகவே மத்திய ஆகாயத்தில் வெளிப்படபோகிறார் ஆகையால் கிறிஸ்துவை மணவாளனாக அடையக்கூடிய மணவாட்டி எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும்? அவர் ஆண்டவர், சிருஷ்டிகர், தெய்வம் ஆனபடியால் அப்படிப்பட்டவரை மணவாளனாக அடையப்போகும் மணவாட்டி அவருடைய சாயலிலே தெய்வீக தன்மையோடு காணப்படவேண்டும். வெளிப்படுத்தின சுவிசேஷம் 21:9,10 வசனங்களில் அப்போஸ்தலர் யோவானுக்கு கிறிஸ்துவின் மனைவியாகிய மணவாட்டி காண்பிக்கப்படுகின்றது அது தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம். ஆகையால் நாம் பரிசுத்த நகரமாகிய எருசலேமாக மாற வேண்டும், அதாவது எங்களுடைய சுபாவங்கள் அந்த பரிசுத்த பரிசுத்தநகரத்தின் தன்மைக்கேற்ப மாற்றப்படவேண்டும்.


கிறிஸ்துவின் மனைவியாகிய மணவாட்டி - மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம்
1.     மதில் வச்சிரக்கல்லைப்போல இருந்தது. (வெளி 21:11)
2.     அதற்குப் பெரிதும் உயரமுமான மதில் காணப்பட்டது. (வெளி 21:12)
3.     நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன. (வெளி 21:14)
4.     அவைகள்மேல் பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. (வெளி 21:14)

1) வச்சிரக்கல் மதில்
மதில் என்பது இரட்சிப்பை காட்டுகிறது (ஏசா 60:20), (ஏசா 26:01) நாம் இரட்சிக்கப்படும் போது எங்கள் ஜீவியத்தில் மதில் உண்டாகுகிறது. முதல் இரட்சிப்பு பாவமன்னிப்பு ஆகும் இந்த பாவமன்னிப்பு இரண்டு வகைப்படுகின்றது .
i. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ii. நாம் மற்றவர்களுடைய தப்பிதங்களை மன்னித்தல்
அதாவது இயேசு கிறிஸ்து கூறினார் மத்தேயு 6:14 ல் மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். ஆகையால் நாம் கட்டாயமாக மற்றவர்களை மன்னிக்கவேண்டும்,இறக்கம் பாராட்ட வேண்டும்.

முதலாவதாக நாம் நம்மை நடத்தும் பரிசுத்தவான்களின் நடத்திட்புக்கு அப்படியே கீழ்படிய வேண்டும் எங்களுடைய சுய/உலக ஞானத்தினால் சிந்திக்க கூடாது. 1 கொரிந்தியர் 1:26-28 ன் படி "எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;.. பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் , தேவன் தெரிந்து கொண்டார்." நாம் இந்த உலகத்திற்கு பைத்திய காரர்களாக மாற வேண்டும்.

இந்த மதிலானது வச்சிரக்கல்லால் கட்டப்படவேண்டும் இந்த வச்சிரக்கல் என்பது நப்தலி கோத்திரத்துக்காக பிரதான ஆசாரியன் மார்பதக்கத்தில் காணப்படுகின்றது(யாத் 28:19-21). நப்தலி என்பதன் அர்த்தம் போராடி மேற்கொண்டேன் என்பதாகும் யுத்தகளத்தில் நப்தலி நின்றதைபோல (எண் 2:29) அப்படி என்றால் ஜெயஜீவியம் செய்யவேண்டும் அடுத்தது இந்த நப்தலி விடுதலை பெற்ற பெண்மான் பாவத்திலிளிருந்து விடுதலை பெற்று பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும்.

2) பெரிய மதில்
எபிரெயர் 2:4 ல் இரட்சிப்பு என்பது பெரியது எனக்கூறப்படுகின்றது நாம் பெற்ற இரட்சிப்பை மிகவும் பெரிய பாக்கியமாக எண்ணி கணம்பண்ணி ஜீவிக்கவேண்டும் "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? என்று மத்தேயு 16:26 ல் கர்த்தர் கூறுகிறார். ஆகையால் இந்த இரட்சிப்பால் கிடைத்த சமாதானத்தை உலக காரியங்களுக்காக இழக்க கூடாது ஏசாயா 53:5 ல் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது என்று வாசிக்கிறோம் இயேசு கிறிஸ்து தன்னுடைய சரீரத்தை கிழிக்கும்படி ஒப்புகொடுத்து நமக்கு சமாதானத்தை பெற்று கொடுத்தபடியால் உலக காரியங்களுக்காக நாம் கோவப்பட்டு முறுமுறுத்து சமாதானத்தை இழந்துபோகக்கூடாது. ஜனங்களோடு நாம் சமாதானமாக இருக்க வேண்டும் மற்றவர்கள் சமாதானத்தை கெடுக்கும்படி நாம் நடக்க கூடாது.

3)உயரமானமதில்
இந்த மதிலானது உயரமாக காணப்பட்டது அது போல எங்களுடைய திவ்யசுபாவ மதிலும் உயரவேண்டும்.  பாவமன்னிப்பு பெறும் போது மதில் உண்டாகி தண்ணீர் ஞானஸ்நானத்தில் உயர ஆரம்பிக்கின்றது ஞானஸ்நானத்தில் நாம் சுயத்திற்க்கும் இந்த உலகத்திற்கும் மரிக்கிறோம் எங்களுக்குள் ஒரு புது சிருஷ்டி உண்டாகுகிறது . 1 கொரிந்தியர் 10 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்கூடாக ஞானஸ்நானம் பெற்றதாக வாசிக்கிறோம் அவர்களை தொடர்ந்து வந்த பார்வோன் சேனையானது பாவத்திற்கு அடையாளமாக காணப்படுகின்றது அந்த பார்வோன் சேனை செங்கடலிலே இரக்கப்பட்டு அழிக்கப்பட்டது அப்படியே நாங்களும் எங்கள் பாவசுபாவங்கலான பார்வோன் சேனையை தண்ணீருக்குள் இரக்கவேண்டும் யாத்திராகமம் 14:17,18 ல் கர்த்தர் பார்வோனையும் அவன் இரத்தங்களையும் குதிரைவீரர்களையும் செங்கடலிலே கவிழ்த்து போடுவேன் என்றார் பார்வோன் கடின இருதயத்தையும், இரதங்கள் மேன்மை பாராட்டளையும் காட்டுகின்றது குதிரைகளை குறித்த விடையத்தில் யோபு 39 ம் அதிகாரத்தில் அது செருக்குள்ளது, அலட்சியம்பண்ணும், கர்வமுள்ளது, மூர்க்கம் கொண்டது, நிகியென்று கனைக்கும்; என்று கர்த்தர் குதிரையின் சுபாவத்தை யோபுக்கு சொல்லி கொடுக்கின்றார். இப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் எங்களை தொடர்ந்துவராமலும் எங்களைவிட்டு நீங்கும் படியாகவும் அவற்றை நாம் ஞானஸ்நானத்தில் மரணத்துக்குள்ளாக, கொண்டுவரவேண்டும். ரோமர் 6:3 ன் படி நம்முடைய குறைகள் எல்லாவற்றையும் அறிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக, கொண்டுவரவேண்டும். எங்கள் சரீரங்களை அறிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக, கொண்டுவரவேண்டும்.

அடுத்ததாக பரிசுத்தாவியானவருடைய அபிஷேகத்தினால் இந்த மதில் உயருகிறது பரிசுத்தாவியானவருடைய அபிஷேகம் ஒரு இரட்சிப்பு தீத்து 3:5 ல் இதை நாம் வாசிக்கின்றோம். அபிஷேக தைலமானது பழைய ஏற்பாட்டு காலத்தில் ஐந்து விதமான பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றது யாத் 30:23-25.
i.
வெள்ளைப்போளம்
ii.
சுகந்தகருவாப்பட்டை
iii.
சுகந்தவசம்பு
iv.
இலவங்கப்பட்டை
v.
ஒலிவ எண்ணெய்

இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தை காட்டுகிறது இந்த அனுபவங்களிலே அபிஷேகம் பெற்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை பரிசுத்தாவியானவர் நடத்தும் படியாக ஒப்புகொடுக்க வேண்டும்.

வெள்ளைப்போளம்
வெள்ளைப்போளம் என்பது ஒரு பட்டையை உரிப்பதன் மூலமாக கிடைக்கும் பொருள் இது பாடுகளின் ஜீவியத்திற்கு அடையாளமாய் இருக்கிறது எஸ்தர் 2:12 ல் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினால் எஸ்தர் சுத்திகரிக்கப்பட்டாள். அப்போஸ்தலர் பவுல் "இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன் கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன் ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்;. என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்" என்று (அப் 20:22-24 ல்) கூறுகிறார். ஆகவே அபிஷேகத்தை பெற்ற ஒரு தேவபிள்ளை தனக்கு இஷ்டமில்லாத, பாடுகளின் ஜீவியத்திற்கூடாக ஆவியானவர் தன்னை நடத்தும்படி ஒப்பு கொடுக்கவேண்டும்.

சுகந்த வசம்பு
சுகந்த வசம்பு பெறப்படும் தாவரமானது யோர்தான் பள்ளதாக்குகளிலே வளரக்கூடியதும் நாணலைப்போல தாள்களை உடையதும் ஆகும். இது தாழ்மையின் ஜீவியத்தை காட்டுகிறது (ஏசா 63:14 ல்) தேவ ஆவியானவர் நம்மை சிறுமைப்படுத்துவார் தாழ்த்துவார் அப்போது நாம் கவலைப்பட கூடாது பரிசுத்தவான்கள் நம்மை நொறுக்கும்போது கவலைப்படகூடாது கவலைப்படாமல் சந்தோஷமாக அந்த நடத்திப்புக்கு நம்மை ஒப்பு கொடுக்கவேண்டும்.


இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையானது பழைய ஏற்பாட்டு காலங்களிலே பிரேதங்களை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.  இது சுத்திகரிப்பின் அனுபவத்தை காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்திகரிக்க வேண்டும் நாமே நம்முடைய கிரியைகளால் நம்மை நீதிமான்களாக்க கூடாது "தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளுகிறவர்களும் தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக் கொள்ளுகிறவர்களும் ... ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் "என்று ஏசாயா 66:17 ல் வாசிக்கிறோம் பின்னும் லூக்கா 18:10 ல் நாம் பார்க்கும் பரிசேயன் ஆயக்காரனை விட தன்னை நீதிமானாக கண்டான் அப்படிபோல நாம் நம்முடைய கிரியைகளால் மற்ற தேவபிள்ளைகளை குறைவாக எண்ண கூடாது (ஏசா 65 : 05) ல் அப்படி பட்டவர்கள் நாள்முழுதும் எரியும் அக்கினி அதாவது நரகத்துக்கு போவார்களென பார்க்கிறோம். யோபு கர்த்தரை கண்டபோது தன்னுடைய எல்லா நீதியையும் அருவருத்து மனஸ்தாபப்படுகிறேன் என்றார் (யோபு 42:5,6) 1 யோவான் 3:2,3 வசனங்களில் பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்" என்று வாசிக்கிறோம். ஆகையால் நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைபார்த்து அவரைப்போலவே நம்மை சுத்திகரிக்கும் படி பரிசுத்தாவியானவருக்கு ஒப்பு கொடுக்கவேண்டும். அத்தோடு வெளிப்படுத்தல் 12 ல் நாம் பார்க்கும் ஸ்திரி கற்பவேதனைப்பட்டு அலறினாள் என்று வாசிக்கிறோம் பிள்ளையை சுமக்கும் ஸ்திரி எப்படி நடக்கும்போது ஒவ்வொரு அடிகளையும் கவனமாக எடுத்து வைப்பாளோ அப்படியே எங்கள் கிரியைகளும் மிகவும் கவனமாக பெருமை இல்லாமல் காணப்படவேண்டும், நாமாக அல்லாமல் பரிசுத்தாவியானவரே அதை செய்ய நம்மை நாம் ஒப்பு கொடுக்கவேண்டும் வேண்டும்.

சுகந்தகருவாப்பட்டை
சுகந்த கருவாப்பட்டை மத்திய ஐரோப்பா பகுதிகளில் நறுமன பொருளாக பயன்படுத்தப்படுகின்றது இது வாசனையின் ஜீவியத்தை காட்டுகிறது வாசனை உள்ள ஜீவியமானது சாட்சியின் ஜீவியத்தை காட்டுகிறது அப்1:8 ல் கர்த்தர் நம்மை உலகத்தின் முடிவு பரியந்தம்  சாட்சியாக இருக்கும்படி சொல்லுகிறார் இந்த வசனம் கிரேக்க பாசையில் மத்தூரியா என்று உள்ளது அதற்கு இரத்த சாட்சிகள் என்று அர்த்தமாம்  ஆகவே நம்ஜீவியம் முழுதும் எல்லா இடங்களிலும் கர்த்தருக்கு இரத்த சாட்சியாக இருக்க வேண்டும்.

ஒலிவ எண்ணெய்
மேலே கூறப்பட்ட நான்கு பொருட்களையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்தபடுவது தான் ஒலிவ எண்ணெய் அத்தோடு ஒலிவ எண்ணெய் சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றது நாங்கள் மேற்கண்ட நான்கு பாதைகளிலும் நடத்தப்படும் போது கட்டாயமாக அல்ல சந்தோஷமாக நாம் காணப்படவேண்டும் இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் துக்கங்கள் எல்லாவற்றிற்கும் பரலோகத்தில் எமக்கு கணம் மகிமை இருக்கிறது என்ற  தரிசனத்தோடு நாம் ஜீவிப்பது அவசியம் அப்படிப்பட்ட தரிசனத்தோடு தான் பவுலைபோன்ற அப்போஸ்தலர்கள் பாடுகளை சந்தோஷமாக அனுபவித்தனர் கிறிஸ்துவின் வருகையிலே எடுத்துகொள்ளப்பட நாமும் சந்தோஷமாக பாடுகளை கடப்போமாக.

4)வேறுபாட்டின் ஜீவியம் செய்ய வேண்டும்
அடுத்தபடியாக இந்தமதில் உயருவதற்கு நாம் வேறுபாட்டின் ஜீவியம் செய்ய வேண்டும் அப் 2:40 ல்மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்என்று வாசிக்கிறோம். பின்னும் 2 கொரி 6:14-18 ல்அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்”.  இந்த காரியங்களை மனிதன் அல்ல சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். மேலும் அந்நிய மக்களோடு மட்டுமல்ல சபைக்குள்ளே இருந்து உபதேசத்திற்கும் பரிசுத்தவான்களுக்கும் விரோதமாக பேசுகிற கிரியை செய்கிற நபர்களுக்கும் நாம் விலகவேண்டும் எங்களுடைய சத்தியத்திற்கு வந்தும்கூட இன்று அநேகர் அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறார்கள் ரோமர் 16:17 ல் "அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்" என்று வாசிக்கிறோம். அவர்களை விட்டு விலகவேண்டுமென்று சொல்லப்படும்போது அவர்கள் வெளிப்படுத்தும் சுபாவங்களை நாமும் வெளிப்படுத்தகூடாது என்பதே பொருள் மற்றும் 2 யோவான் 10 ல் "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்" என்று வாசிக்கிறோம் பின்னும் 11 ம் வசனத்தில் "அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்" என்று கூறப்பட்டுள்ளது. எனவே சபைக்குள்ளே இருந்து உபதேசத்திற்கும் பரிசுத்தவான்களுக்கும் விரோதமாக பேசுகிற கிரியை செய்கிற நபர்களோடு நாம் ஐக்கியம் வைக்கவோ வாழ்த்துதல் சொல்லவோ கூடாது சொன்னால் நாமும் அவர்களுடைய துர்கிரியைகளுக்கு பங்குள்ளவர்களாய் இருப்போம் . 2 யோவான் 9 ல் "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" என்ற வார்த்தையின் படி என்னதான் பாடுகள் நிந்தைகள் வந்தாலும் நாங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்தில் நிலைத்திருக்கவேண்டும். 2 தெச 3:6 ல் எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே கட்டளை கொடுக்கப்படுகின்றது இந்த கட்டளைக்கு நாம் கீழ்படிவது அவசியம். எபேசியர் 2:19 ல் ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, என்று வாசிக்கிறோம் இந்த வசனத்தின் படி நமக்கு பரிசுத்தவான்களோடு ஒரு நல்ல ஐக்கியம் இருக்க வேண்டும். வேருபிரிந்த ஜீவியம் எனப்படுவது கோவம், ஆத்திரம் மற்றும் மாமிசசுபாவங்கள் வெளிப்படுத்தவேண்டிவரும் சமயங்களில் கனிகளால் நிறைந்த ஜீவியத்தை வெளிப்படுத்துவதே ஆகும்.

5)தெய்வீகசுகம்
தெய்வீகசுகம் ஒரு இரட்சிப்பு என்று யாக்கோபு 5:15 ல் (விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்) சொல்லப்பட்டுள்ளது ஆகையால் நாம் தெய்வீகசுக சத்தியத்தில் நிற்பது அவசியம் மதில் உயரும்படிக்கு இது ஒரு முக்கியமான விடையமாகும்.

6)பரிசுத்தமாக
1 தெச 5:23 ல் சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. என்று வாசிக்கிறோம் ஆகையால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது நாம் முற்றிலும் பரிசுத்தமாக காணப்படும் படிக்கு நாம் ஜீவிப்பது அவசியமாகும்.

7) வருகையை நோக்கிய ஒரு தவிப்பு
ரோமர் 8:23 ல் சொல்லப்பட்டுள்ள வண்ணம் அதாவது "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்" ஆண்டவருடைய வருகையை நோக்கிய ஒரு தவிப்பு ஒரு பிரசவவேதனை நமக்குள் காணப்படவேண்டும். ஜெய ஜீவியம் செய்ய முடியாமல் இருப்பவர்கள் கர்த்தரிடம் தங்களுடைய பெலவீனங்களை அறிக்கையிட்டு அவர்களுடைய குறைகளை கர்த்தர் தாமே நீக்கி ஜெயத்தை தரவேண்டும் என்ற ஒரு தவிப்பு, பிரசவவேதனை அவர்களுக்கு உண்டாகவேண்டும்.

பரிசுத்த வேதாகமத்தில் ஏழாம் எண் பூரணத்தை காட்டுகிறது மேற்கூறப்பட்ட ஏழு காரியங்களும் நிறைவேறும்போது மதிலின் வேலை முடிகிறது

நகரம் சதுரமாயிருந்தது
அந்த நகரமானது சதுரமாக காணப்பட்டதாக வாசிக்கிறோம் (வெளி 1:16) சதுரத்தில் நான்கு பக்கங்கள் உண்து அவ்வாறு நாம் இந்த பூமியில் அடைய வேண்டிய நான்கு பூரணங்கள் உண்டு எசேக்கியேல் கண்ட தரிசனத்தில் ஜீவன்களில் ஒன்றுக்கு நான்கு முகங்கள் படி நான்கு ஜீவன்களுக்கும் காணப்பட்டன அவைகள் மனிதமுகம், சிங்கமுகம், கழுகுமுகம் மற்றும் எருதுமுகங்கலாகும் (எசே 1:5 - 10). பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு ஒருபூரணம் காணப்பட்டது ஆனால் புதிய எருசலேம் சீயோனுக்கு நான்கு பூரணங்கள் காணப்படுவது அவசியமாய் இருக்கிறது. முதலாவதாக விசுவாசம் பூரணப்படவேண்டும் (யாக் 2:22) கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட வேண்டும் அதற்கு ஊழியர்களை விசுவாசிக்கவேண்டும் மத்தேயு 21:31,32 ல் "அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி:. ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார் "என்று வாசிக்கிறோம். அடுத்ததாக ஊழியகாரர்களுடைய பிரசங்கங்களை, வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும். எபி 12:25 ல் "பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்;? ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்" என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 2 இராஜாக்கள் 7:1,2,17 ம் வசனங்களில் எலிசாவின் வார்த்தையை விசுவாசிக்காத பிரதானி செத்தான் என்று பார்க்கிறோம். பரிசுத்தவான்களின் பிரசங்கமும் வார்த்தைகளும் பரிசுத்தாவியானவரால் கொடுக்க படுகின்றது அதற்கு விரோதமாக பேசாமல் அந்த காரியங்களுக்கு கீழ்ப்படிவோமாக. இரண்டாவது பூரணம் அன்பின் பூரணம் 1யோவான் 4: 12 ல் அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும் என்று வாசிக்கிறோம் ஆகையால் நாம் அன்பில் பூரணப்படவேண்டும். மூன்றாவது பூரணம் பரிசுத்தத்தில் பூரணம் 2 கொரி 7:1 ல் "பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" என்று வாசிக்கிறோம். நான்காவது பூரணம் தேவசித்தத்தை பூரணப்படுத்துவது ரோமர் 12:2 ல் "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக" என்று சொல்லப்பட்டபடி தேவனுடைய பரிபூரணமுமான சித்தத்தை பகுத்தறிந்து அதை பூரணப்படுத்தவேண்டும்.
இந்த நான்கு பூரணங்களும் எங்களுக்குள்  வரவேண்டுமானால்
நாம் மெல்கிசிதேக்கின் முறைமையின் படி ஊழியகாரர்களான அப்போஸ்தலரால் நடத்தப்பட வேண்டும்.

வேதத்திலே இரண்டு ஊழியங்களை காண்கிறோம் 1. ஆரோனின் ஊழியம், 2. மெல்கிசிதேக்கின் ஊழியம் ஆனால் மெல்கிசிதேக்கின் ஊழியமே மனிதனை பூரணப்படுத்தும் என்று எபி 7:11 ல் வாசிக்கிறோம். எபி 3:1 ன் படி நம்முடைய அன்பு ஆண்டவரே முதல் அப்போஸ்தலராக இருக்கிறார்.


யார் இந்த அப்போஸ்தலர்கள்?  அவர்களை கண்டு பிடிப்பது எப்படி?
வெளிப்படுத்தல் 2:2 ல் அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; என்று வாசிக்கிறோம் ஆகையால் நமக்கு அப்போஸ்தலரை சோதித்து கண்டறிய அதிகாரம் உண்டு.

முதலாவதாக எபி 5:4 ன் படி இவர்கள் அழைக்கப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்.
இரண்டாவது அனுப்பப்பட்டவராய் இருக்கவேண்டும் (மத் 10:5).
மூன்றாவதாக அபிஷேகம் பெற்றவராய் இருக்கவேண்டும் (1 பேது 1:12)
நான்காவது அவர்பிரதிஷ்டை உடையவராய் இருக்கவேண்டும் (லூக் 14:26)
ஐந்தாவது விசுவாச ஜீவியம் செய்யவேண்டும் (ரோம 1:7)
ஆறாவதாக மாமிசத்தின்படி ஒருவரையும் அறியக்கூடாது (2 கொரி 5:16)
ஏழாவதாக பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டும் (1 தெச 4:7)

பரிந்து பேசுவதற்கும், அவருடைய ஜெபத்தை பரலோகம் அங்கீகரிப்பதற்கும் மெல்கிசிதேக்கின் ஊழியம் தேவை (ஏசா 56:7) அடுத்தது அப்போஸ்தலர்கள் பரலோகராட்சியத்திநிமித்தம் தன்னை அண்ணகர்களாக்கி கொண்டவர்களாய் இருக்கவேண்டும்.

இந்த மதில் நிற்கும் பன்னிரண்டு கற்களிலும் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்கள் காணப்பட்டன 
பாவத்தை அப்போஸ்தலரிடம் அறிக்கை இடுதல், ஞானஸ்நானம், போதனை மற்றும் எல்லா நடத்திப்பும் அப்போஸ்தலரால் வழங்கப்படவேண்டும்.

கடைசியாக எபேசியர் 4 :11-13 ன் படி கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணத்தை அடைந்தாள் தான் அவருடைய வருகையிலே எடுத்து கொள்ளப்பட முடியும் ஆகவே அப்படிப்பட்ட கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கஅவருடைய சரீரமாகிய சபையில் காணப்படவேண்டும். இப்படிப்பட்ட சபையை கண்டுபிடிக்க மூன்று காரியங்களை ஆராயவேண்டும் முதலாவது 1கொரி 12:25 ன் படி சரீரத்தில் பிரிவினை காணப்படகூடாது அதாவது தேவ பிள்ளைகளுக்கு மத்தியில் பிரிவினை காணப்படகூடாது, இரண்டாவது மற்றவர்களை குறித்து கவலைப்படவேண்டும், மூன்றாவது கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுக்க வேண்டும் இப்படிபட்ட உபதேசத்திலுள்ள சபையை கண்டுபிடிக்கவேண்டும் அந்த சபையானது அப்போஸ்தலரால் நடத்தப்பட வேண்டும் அப்படிப்பட்ட சபையிலே நாமும் அங்கத்தவராகி அவ்வாறு ஜீவிக்க வேண்டும். இப்படி ஜீவித்தால் அவருடைய வருகையிலே எடுத்துகொள்ள படலாம்.

மேலும் அந்த பரிசுத்த நகரத்திற்கு முத்துக்களால் ஆன பன்னிரண்டு வாசல்கள் மூன்று மூன்றாக நான்கு திசைகளிலும் காணப்பட்டன. இதுவரை சொல்லப்பட்ட காரியங்கள் உங்கள் ஜீவியங்களில் வரும்போது அந்த வாசல்களுக்கான வெளிப்படுத்தல்களையும் கர்த்தரால் பெற்றுகொள்வீர்கள்.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...

Comments

Popular posts from this blog

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்படுபவர்கள் யார்?